தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் | 33 |
பொருப்பிற் கரிய புகர்முக வெங்கூற்றின் மருப்பிற் றுளைப்புண்ண வாரா - திருப்பில் வடியுளவாஞ் செவ்வேல் மகதையர் கோமா னடியுளவாம் வேந்தற் கரண். 7 அரிந்த கனைகழற்காற் போர்வளவர் கோனை வரிந்த திறைக்காக வாணா - தெரிந்தானை வாங்கினா யென்று வழுதியர்கள் தாங்கலங்கி யேங்கினார் பாரிழந்தோ மென்று. 8 முருகுந்து காஞ்சியும் வஞ்சியும் கொண்ட மொய்தார் மகதன் திருகுங் கனைகழல் வீக்கிய நாள்சீ பராந்தகனிற் பெருகுங் குருதிப் புனல்வாய் தொறும் பிலவாய் மடுத்துப் பருகுங் கழுதுடன் செம்மைகொண் டாற்கும் பனிக்கடலே. 9 மட்டியன் றேறிய தார்புனை வாண புரந்தரனீ` வெட்டியன் றேகொன்ற வெண் மணிப்பொடி யுதிரவெள்ளத் தொட்டியென் றேனுந் துலைவதுண்டே துலையாதபந்தி கட்டியன் றேதெவ்வர் பாய் பரித்தானை கலக்குவதே. 10 கொங்குங் கலிங்கமுங் கொண்ட கண்டா கொடித் தேருதியர் தங்கும் பதிகொண்ட வாணாதிபா தணியாத தென்கொல் பொங்குஞ் சினப்படை வங்கார 1தொங்கன் புரண்டுவீழச் செங்குன்ற மின்று பிணக்குன்ற மாக்கிய தேர்மன்னனே. 11 வாரொன்று முலையாய்மற் றவரொன்றும் பழுதுரையார் மகதை வேந்தன் போரொன்று புரியாமுன் பெரியகுறிச் சியில்லெழுந்த புகையே கண்டாய் காரன்று கனலெரியை மின்னென்று தளரேல் காரைக் காட்டி லூரொன்று மதிள்விழுந்த பேரொலியும் உருமதிர்வ தொக்கும் காணே. 12 முன்பொரு படைக்டலை விட்டரச ரானார் மூலதன மும்பரியு முறைமுறை பரிவாரித் |