மறைந்துபோன தமிழ் நூல்கள் | 193 |
பெறுதலுமென. செய்தானாற் பெயர் பெற்றன, அகத்தியம், தொல்காப்பி யம் என இவை. செய்வித்தானாற் பெயர் பெற்றன, சாதவாகனம், இளந் திரையமென இவை. இடுகுறியாற் பெயர் பெற்றன நிகண்டு, நூல், கலைக் கோட்டுத் தண்டென இவை. அளவினாற் பெயர் பெற்றன பன்னிரு படலமென்பது. சிறப்பினாற் பெயர் பெற்றது களவிய லென்பது.” மயிலைநாதரும், நன்னூல் உரையில், “இடுகுறியாற் பெயர் பெற்றன நிகண்டு, நூல், கலைக்கோட்டுத் தண்டு” என்று கூறுகிறார். இது நாடகத்தமிழ் நூல் என்பது அடியார்க்கு நல்லார் உரைப் பாயிரத்தினால், தெரிகிறது. அடியார்க்கு நல்லார் இந்நூலிலிருந்து இரண்டு சூத்திரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்: “இறக்கவே வரும் பெருங்கல முதலிய பிறவுமாம், இவற்றுட் பெருங்கலமாவது பேரியாழ்: அது கோட்டின தளவு பன்னிரு சாணும், வணரளவு சாணும், பத்தரளவு பன்னிரு சாணும் இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும், திவவும், உந்தியும் பெற்று ஆயிரங்கோல் தொடுத்தி யல்வது. என்னை? ‘ஆயிர நரம்பிற் றாதியா ழாகு மேனை யுறுப்பு மொப்பன கொளலே பத்தர தளவுங் கோட்டின தளவு மொத்த வென்ப விருமூன் றிரட்டி வணர்சா ணொழித்தென வைத்தனர் புலவர்’ என நூலுள்ளும் ... ... ... ... கூறினாராகலாற் பேரியாழ் முதலிய ஏனவும் இறந்தனவெனக் கொள்க.” (சிலம்பு, அடியார்க்கு நல்லார், உரைப்பாயிரம்) சிலம்பு., அரங்கேற்று காதை, 130ஆம் அடியாகிய “குயிலுவ மாக்க ணெறிப்பட நிற்ப” என்னும் அடியின் உரையில் அடியார்க்கு நல்லார், நூலினின்று மற்றொரு சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார்: “முறைமையாவது:- ‘ஆடிட முக்கோ லாட்டுவார்க் கொருகோல் பாடுநர்க் கொருகோ லந்தர மொருகோல் குயிலுவர் நிலையிட மொருகோல்’ என்று நூலிற் கூறின முறையென்க.” |