| 232 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
‘நாலசைச்சீர் வெண்பாவி னண்ணா வயற்பாவி னாசைச்சீர் நேரீற்று நாலிரண்டா - நாலசைச்சீர் ஈறுநிறை சேரி னிருநான்கும் வஞ்சிக்கே கூறினார் தொல்லோர் குறித்து’ என்னும் புறனடையானும் பிறவாற்றானும் விளக்கங் கூறினாரா கலானும் என்க.” (யாப்பருங்கல லிருத்தி, சீரோத்து, 15 உரை.) யாப்பருங்கல விருத்தியுரைகாரர், அவிநயப் புறனடையாகிய நாலடி நாற்பதிலிருந்து கீழ்க்காணும் வெண்பாக்களை மேற்கோள் காட்டுகிறார்: “‘குறினெடி லாய்த மளபெடையை காரக் குறில்குற் றிகர வுகர - மறுவில் உயிர்மெய் விராய்மெய்யோ டாறாறெழுத்தாஞ் செயிர்வன்மை மென்மை சமன்.’ 1 என்பது நாலடி நாற்பது என்னும் நூலின் எழுத்துப் புறனடை. “குறிலுயிர் வல்லெழுத்துக் குற்றகர வாதி குறுகிய ஐஒளமவ் வாய்த - நெறிமையா லாய்ந்த வசைதொடைதாம் வண்ணங்கட் கெண்முறையா லேய்ந்தன நானான் கெழுத்து.’ 2 இது நாலடி நாற்பது என்னும் நூலின் அசைப் புறனடை.” (யாப்பருங்கலம், எழுத்தோத்து உரை மேற்கோள்)’ “‘ஆசிரியப் பாவி னயற்பா வடிமயங்கும் ஆசிரியம் வெண்பாக் கலிக்கண்ணாம் - ஆசிரியம் வெண்பாக் கலிவிரவும் வஞ்சிக்கண் வெண்பாவி னொண்பா வடிவிரவா வுற்று.’4 3 ‘சீர்வண்ணம் வெள்ளைக் கலிவிரவும் வஞ்சிவு ளூருங் கலிப்பா சிறுச்சிறிதே - பாவினுள் வெண்பா வொழித்துத் தளைவிரவுஞ் செய்யுளாம் வெண்பா கலியுட் புகும்.’ என்றார் நாலாடி நாற்பதுடையாரெனக் கொள்க.” 4 (யாப்பருங்கலம், அடியோத்து உரை மேற்கோள்) |