| மறைந்துபோன தமிழ் நூல்கள் | 239 |
நீர்த்திரை போல நிரலே முறைமுறை ஆக்கஞ் சுருங்கி யசையடி தாழிசை விட்டிசை விரியத் தொடுத்துச் சுரிதகம் தாங்கித் தழுவும் தரவினோ டைந்தும் யாப்புற் றமைந்தன வம்போ தரங்கம். 27 வெண்டளை தன்றளை யென்றிரு தன்மையின் வெண்பா வியலது வெண்கலி யாகும். 28 அந்தடி மிக்குச் சிலபல வாயடி தந்தமு ளொப்பன தாழிசை யாகும். 29 எருத்திய லின்றி யிடைநிலை பெற்றும் இடைநிலை யின்றி யெருத்துடைத் தாகியும் எருத்த மிரட்டித் திடைநிலை பெற்றும் இடைய திரட்டித் தெருத்துடைத் தாயும் இடையு மெருத்து மிரட்டுற வந்தும் எருத்த மிரட்டித் திடைநிலை யாறா அடக்கியல் காறு மமைந்த வுறுப்பிற் கிடக்கை முறையாள் கிழமைய தாயும் தரவொடு தாழிசை யம்போ தரங்கம் முடுகியல் போக்கியல் என்றிவை யெல்லாம் முறைதடு மாற மொழிந்தவை யன்றி இடையிடை வெண்பாச் சிலபல சேர்ந்து மற்றும் பிறபிற வொப்புறுப் பில்லன கொச்சக மென்னுங் குறியின வாகும். 30 ஐஞ்சீ ரடியி னடித்தொகை நான்மையோ டெஞ்சா தியன்றன வெல்லாங் கலித்துறை. 31 நாலொரு சீரா னடந்த வடித்தொகை ஈரிரண் டாகி யியன்றன யாவையுங் காரிகை சார்ந்த கலிவிருத் தம்மே. 32 குறளடி நான்கவை கூடின வாகி முறைமையி னவ்வகை மூன்றிணைந் தொன்றாய் வருவன வஞ்சித் தாழிசை யாகும். 33 |