284 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
இடங்களில் மயேச்சுவரர் என்னும் பெயரையும் குறிக்கிறார். இதனால் மயேச்சுவரர் என்னும் சிவபெருமான் திருப்பெயரைத் தமக்கு இயற் பெயராகக் கொண்டவரே (மயேச்சுவரரே), பேராசிரியர் என்னும் சிறப்புப் பெயரையும் உடையவர் என்பதும், இருவரும் ஒருவரே என்பதும் தெரிகின்றன. எனவே, யாப்பருங்கல விருத்தியுரைகாரர் தமது விருத்தியுரையில், பேராசிரியர் பெயரால் மேற்கோள் காட்டுகிற சூத்திரங்களையும், மயேச்சுவரர் பெயரால் மேற்கோள் காட்டுகிற சூத்திரங்களையும் ஈண்டு ஒருங்கே தருகிறோம். இவை மயேச்சுவரர் பெயரால் காட்டப்பட்ட சூத்திரங்கள்:- சீர்தளை சிதைவுழி யீருயிர்க் குறுக்கமும் நேர்த லிலவே யுயிரள பெடையும். 1 நேர்நிரை நேர்பு நிரைபென நான்கும் ரடருடு வடிவாக விடுவா ருமுளர். 2 நேர்நிரை நேர்பு நிரைபென நான்கும் ரடருடுப் போல வொருவிர னேரே. 3 விரலிடை யிட்டன வசைச்சீர் நாலசை விரல்வரை யிடையினு மானமில்லை. 4 விரலிடை யிட்டன ரடருடு வாடரு வெடிவரி னிரல்பட வெழுதி யலகு பெறுமே. 5 ஏவல் குறிப்பே தற்சுட் டல்வழி யாவையுந் தனிக்குறின் முதலசை யாகா; சுட்டினும் வினாவினு முயிர்வரு காலை ஒட்டி வரூஉம் ஒருசாரு முளவே. 6 இயற்சீ ருரிச்சீர் பொதுச்சீ ரென்னும் நிகழ்ச்சிய வென்ப நின்ற மூன்றும். 7 நேரு நிரையுஞ் சீராய் வருதலுஞ் சீருந் தளையுஞ் சிதைவுழிக் கொளலும் யாவரு மறிவர் நால்வகைப் பாவினும். 8 நேரீயற் றியற்சீர் கலிவயிற் சேரா; நிரையிற நிற்ற நாலசை யெல்லாம் வரைதல் வேண்டும் வஞ்சியில் வழியே. 9 |