மறைந்துபோன தமிழ் நூல்கள் | 285 |
நிரைநடு வியலா வஞ்சி யுரிச்சீர் வரைதல் வேண்டு மாசிரிய மருங்கின். 10 ஈரசை யியற்சீ ரொன்றிய வெல்லா மாசிரி யத்தளை யென்மனார் புலவர். 11 இயற்சீ ரொன்றா நிலையது வெண்டளை; யுரிச்சீ ரதனு ளொன்றுத லியல்பே. 12 நேரு நிரையுமா மியற்சீ ரொன்றின்; யாவரு மறிப வாசிரி யத்தளை. 13 வேறுபட வரினிது வெண்டளை;வெண்சீர் ஆறறி புலவர்க் கொன்றினு மதுவே. 14 வெண்சீர்ப் பின்னர் நிரைவருங் காலைக் கண்டனர் புலவர் கலித்தளை யாக. 15 வஞ்சி யுரிச்சீர் வந்தன வழிமுறை யெஞ்சிய வரினும் வஞ்சித் தளையே. 16 இருசீ ரடியும் முச்சீ ரடியும் வருதல் வேண்டும் வஞ்சியுள்ளே. 17 பொருளினுஞ் சொல்லினு முரணத் தொடுப்பின் முரணென மொழிப முந்தை யோரே. 18 பெற்றவடி யைந்தினும் பிறவினும் பாட்டாய் இற்ற வடியு மீற்றய லடியும் யொன்று மிரண்டு நின்ற வதன்சீர் கண்டன குறையின் வெண்டுறை யாகும். 19 ஈற்றயல் குறைந்த நேரசை யிணையா மேற்ற வடியி னிடைபல குறைந்தன. 20 எவ்வடி யானு முதனடு விறுதி அவ்வடி பொருள் கொளின் மண்டில யாப்பே. 21 ஒத்த வடியின நிலைமண் டிலமே. 22 என்னெனு மசைச்சொலும் பிறவு மொன்றித் துன்னவும் பெறூஉ நிலைமண் டிலமே என்னென் றிறுதல் வரைநிலை யின்றே |