பக்கம் எண் :

286மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

அல்லா வொற்றினு மதனி னிறுதி
நில்லா வல்ல நிற்பது வரையார்.     23

ஒத்த வொருபொருண் மூவடி முடியினஃ
தொத்தா ழிசையா முடன்மூன் றடுக்கின்.     24

எண்சீ ரளபீற் றயலடி குறைநவும்
ஐஞ்சீ ரடியினும் பிறவினு மிடையொன்ற
வந்த தொடையா யடிநான் காகி
யுறழக் குறைநவுந் துறையெனப் படுமே.     25

தளைகலி தட்டன தன்சீர் வெள்ளை
களையுந வின்றிக் கடையடி குறையின
விரவர லில்லா வெண்கலி யாகும்.     26

கூறிய வுறுப்பிற் குறைபா டின்றித்
தேறிய விரண்டு தேவ பாணியும்
தரவே குறையினுந் தாழிசை யொழியினும்
இருவகை முத்திறத் தெண்ணே நீங்கினும்
ஒருபோ கென்ப வுணர்ந்திசி னோரே.     27

ஐஞ்சீர் நாற்சீ ரடிநான் காயி
னெஞ்சாக் கலியின் றுறையும் விருத்தமும்.     28

இருசீர் நாலடி மூன்றிணைந் தொன்றி
வருவது வஞ்சித் தாழிசை தனிநின்
றொருபொருண் முடிந்தது துறையென மொழிப.     29

தன்சீர் நிலையிற் றளைதம தழீஇய
வின்பா வென்ப வியல்புணர்ந் தோரே
யேனையவை விரவி னிடையெனப் படுமே
தானிடை யில்லது கடையெனப் படுமே.     30

“இரண்டடியால் வஞ்சி வரும் என்றெடுத்தோதினார். மயேச்சுவ ரர் முதலாகிய ஒருசாராசிரியர் எனக்கொள்க. என்னை?

வெண்பா வாசிரியங் கலியே வஞ்சியென
நுண்பா வுணர்ந்தோர் நுவலுங் காலை
இரண்டு மூன்று நான்கு மிரண்டுந்
திரண்ட வடியின சிறுமைக் கெல்லை.     31