பக்கம் எண் :

288மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

மூவடி யாகியு நாலடி யாகியும்
பாவடி வீழ்ந்து பாடலு ணடந்தும்
கடிவரை வில்லா வடிதொறுந் தனிச்சொற்
றிருத்தகு நிலைய விருத்த மாகும்.     11

இயற்சீர்த் தாகியு மயற்சீர் விரவியும்
தன்றளை தழுவியும் பிறதளை தட்டும்
அகவ லோசையதாசிரி யம்மே.     12

ஏயென் றிறுவத தாசிரியத் தியல்பே
ஓஆ யிறுதியு முரியவா சிரியம்.
நின்ற தாதி நிலை மண் டிலத்துள்
என்று மென்னென் றிறுதிவரை வின்றே
அல்லா வொற்று மகவலினிறுதி
நில்லா வல்ல நிற்பன வரையார்.     13

ஆறு முதலா வெண்சீர் காறும்
கூறு நான்கடி யாசிரிய விருத்தம்     14

சீரிற் கிளந்த தன்றளை தழுவி
நேரீற் றியற்சீர் சேரா தாகி
துள்ள லோசையிற் றள்ளா தாகி
யோதப் பட்ட வுறுப்புவேறு பலவா
யேத மில்லன கலியெனப் படுமே.     15

ஒத்தா ழிசைக்கலி வெண்கலி கொச்சகம்
முத்திறத் தடங்கு மெல்லாக் கலியும்.     16

தரவொன் றாகித் தாழிசை மூன்றாய்த்
தனிச்சொ லிடைக்கிடந்து சுரிதகந் தழுவ
வைத்த மரபின தொத்தா ழிசைக்கலி.     17

தரவி னளவிற் சுரிதக மயற்பா
விரவு மென்ப ராசிரியம் வெள்ளை.     18

வண்ணகத் தியற்கை திண்ணிதிற் கிளப்பிற்
றரவொடு தாழிசை தலையள வெய்தித்
தாழிசைப் பின்னர்த் தனிநிலை யெய்திப்