290 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
41. மாபுரணணம். 42. பூதபுராணம். இப்பெயருடைய நூல்கள் இருந்தன என்பது இறையனார் அகப் பொருள் உரைப் பாயிரத்தினாலும், பேராசிரியர் உரையினாலும், மயிலை நாதர் உரையினாலும், யாப்பருங்கலக் காரிகை உரையினாலும் தெரிகிறது. “அவர்க்கு (இடைச்சங்கத்தாருக்கு) நூல் அகத்தியமும் தொல் காப்பியமும் மாபுராணமும் இசை நுணுக்கமும் பூதபுராணமும் என இவையென்ப.” (இறையனார் அகப்பொருள், உரைப்பாயிரம்) “இனிப் படர்ந்து பட்ட பொருண்மையவாகிய மாபுராணம் பூத புராணம் என்பன சிலவாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப் படாமையின், தொகுத்துச் செய்யப்பட்டு வழக்கு நூலாகிய தொல்காப்பியம் இடைச் சங்கம் முதலாக இன்று காறும் உளதாயிற்றெனக் கொள்க.” (தொல். பொருள், “தொகுத்தல் விரித்தல்” என்னும் 96-ஆம் சூத்திரம், பேராசிரியர் உரை) ‘மதிநலங் கவின்ற மாபு ராணப் புதுநலங் கனிந்த பூத புராணம்’ என்று கூறுகிறது ஒரு பழைய தனிப்பாடல். “‘செய்யுட்க ணோசை சிதையுங்கா லீரளபு மையப்பா டின்றி யணையுமா - மைதீரொற் றின்றியுஞ் செய்யுட் கெடினொற்றை யுண்டாக்குக் குன்றுமே லொற்றளபுங் கொள்.’10 என மாபுராணமுடையாரும் சொன்னாராகலின்.” (நன்னூல், எழுத்தியல் - 37ஆம் சூத்திரம், மயிலைநாதர் உரைமேற்கோள்) யாப்பருங்கல விருத்தியுரைகாரர் கீழ்காணும் மாபுராணச் செய்யுள்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார்: “மகரக் குறுக்கத்துக்குப் பயன் மாபுராணமுடையார் எடுத்தோதி னார். என்னை? |