மறைந்துபோன தமிழ் நூல்கள் | 291 |
‘கழிநெடி லசையுங் காலெழுத் தசையும் பெயரயற் புணர்பினும் பெயரிடைப் புணர்ப்பினும் வழுவென மொழிப வாய்மொழிப் புலவர்’ 1 என்றாராகலின், ‘ஆய்தமு மொற்றா யடங்கினு மாங்கதனை ஓதினார் தொன்னூ லுணர்வுடையோர் - நீதியால் ஒற்றா யடங்கினு முன்கால வேற்றுமையாற் சொற்றார் மகரச் சுருக்கு.’ 2 எனவும், ‘மெய்யென்ற சொல்லானே மிக்கமக ரத்தினையும் நையு மடங்கு நனியென்னின் - ஐயென்ப தாவி யெனவடங்கு மஃகிற் றெனின் மகரத் தேய்விற்கு மஃதே திறம்.’ 3 எனவும் கூறினார். இன்னும் மகரக் குறுக்கத்தின் பயன் மகரப் பிர கரணத்துங் காண்க. ஈண்டு உரைப்பிற் பெருகும். ‘உயிரென்ற சொல்லானே யொன்பதா மாவி செயிரின்றிச் சென்றடங்கு மேனும் - பயில்புரைத்தார் குன்றுதலா லெனனிற் குணம்புரிந்தா ரௌவுந்தான் குன்றுதலாக் கூறப் படும்’ 4 எனவும், ‘கால விகப்பத்தாற் கட்டுரைக்கப் பட்டவற்றுண் மூல வியனூன் முறைமையான் - ஞாலத்து ளெல்லா மெடுத்துரைத்தார்க் காமோ சிலவெழுத்துச் சொல்லாதார்க் காகுமோ தோம்.’ 5 எனவும், ‘அசையாக்குந் தன்மையவே யன்றித் தொடையோ டிசையாக்கு மேளையவுஞ் சொற்றார் - இசைதொடைதோ மாக்கு மெழுத்தனைத்துஞ் சொன்னா ரசைமுகத்தாற் றூக்கியநூற் கேற்பத் தொகுத்து.’ 6 எனவும், |