296 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
வெண்பா முதலா நால்வகைப் பரவு மெஞ்சா நாற்பால் வருணர்க் குரிய பாவினத் தியற்கையு மதனோ ரற்றே சீரினுந் தளையினுஞ் சட்டக மாயினும் பேரா மரபின் பாட்டெனப் படுமே. 1 அவைதிரி பாகின் விசாதி யாகும். 2 45. வாருணப் பாட்டியல் இந்நூலை டாக்டர் உ. வே. சாமிநாதையர், ‘சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்னும் நூலில் கூறுகிறார். அவர் கூறுவது: “வாருணப் பாட்டியல் என்னும் நூலிலிருந்து மேற்கோளாகச் சில சூத்திரங்கள் மட்டும் உரைகளில் காணப்படுகின்றன. நூல் கிடைத் திலது.” இந்நூலைப்பற்றிய வேறு செய்திகள் கிடைக்கவில்லை. மேற்கோளாகக் காட்டப்பட்ட சூத்திரங்களும் கிடைக்கவில்லை. |