பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்295

“பேணுதகு சிறப்பிற் பெண்மக வாயின்
மூன்றா மாண்டின் மொழிகுவ குழமகன்.”     5

(நவநீதம்-44-ஆம் செய்யுளுரை மேற்கோள்).

“ஓதலும் பாடலு மூசலும் பிறவும்
பதினெண் தேசத்துப் பலபல பேச்சின விறலும்
அனைவர்க்கு முரித்தே ஆயுங் காலை.”     6

“மங்கை முதலா மாற்றவரும்
ஆணுடை யுடுத்தலும் ஆடகம் புனையலும்
அம்மனை கழங்கே ஊசல் பந்தொடு
சூது பொருதலுங் காளையிற் பிரிதலும்
பல்லோ ராயத்திலு மக்களுண வாக
அனையவை பிறவுமவர்க் குரிய வென்ப.”     7

(நவநீதம்-45-ஆம் செய்யுளுரை மேற்கோள்).

“அறம்பொருள் வீடெனு மூன்றையும் பழித்துக்
காமமே பொருளா அரிவை யருள்பெற
வேட்கையி னான்மட லூர்வனென் னும்பொருள்
பாட்டுடைத் தலைமக னியற்பெயர்க் கியைந்த
எதுகைவகுத் தாக்கிய கலிவெண் பாவை
மடலென் றுரைப்பர் வண்டமிழ்ப் புலவர்.”     8

(நவநீதம்-46-ஆம் செய்யுளுரை மேற்கோள்).

“அராகம் வெள்ளை யகவல் முதலின்
ஆசிரியம் வஞ்சி மெல்லியற் புகழினும்
வரைத லிலவென விரைசெய்வர் புலவர்.”     9

(நவநீதம்-47-ஆம் செய்யுளுரை மேற்கோள்).

44. யாப்பியல்

யாப்பருங்கல விருத்தியுரைகாரர் (ஒழிபியலில்) யாப்பியல் என்னும் நூலைக் குறிப்பிடுகிறார். இந்நூலினின்று இரண்டு சூத்திரங் களையும் மேற்கோள் காட்டுகிறார். யாப்பியல் நூலைப்பற்றியும், அதன் ஆசிரியரைப் பற்றியும் வேறொன்றும் தெரியவில்லை. யாப்பருங்கல விருத்தியுரைகாரர் மேற்கோள் காட்டிய யாப்பியல் சூத்திரங்கள் இவை: