பக்கம் எண் :

294மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

மாபுராணம் இயற்றிய ஆசிரியர் யார் என்பது முதலிய செய்திகள் தெரியவில்லை. மாபுராணம் வெண்பாவும் சூத்திரமும் கலந்து இயற்றப் பட்ட நூலெனத் தெரிகிறது. பூதபுராணத்திலிருந்து வேறு சூத்திரங்கள் கிடைக்கவில்லை.

43. முள்ளியார் கவித்தொகை

நவநீதப் பாட்டியலின் பழைய உரை முள்ளியார் கவித் தொகை என்னும் பெயருள்ள பாட்டியல் நூலைக் குறிப்பிடுகிறது. முள்ளி யாரைப் பற்றியும் அவர் இயற்றிய கவித்தொகையைப் பற்றியும் யாதொரு செய்தியும் தெரியவில்லை. நவநீதப் பாட்டியல் பழைய உரை யாசிரியர், இந் நூலிலிருந்து சில சூத்திரங்களை மேற்கோள் காட்டி யுள்ளார். அவை:

“நான்கு பாவு மினமு மயங்கி
யான்ற யமக மான பொருளினும்
வருவது கலம்பகம்.”     1

(நவநீதம்-33-ஆம் செய்யுளுரை மேற்கோள்).

“அமரர்க்கு நூறந் தணர்க்கிழி வைந்து
அரசர்க்குத் தொண்Q று மூன்றாம் பட்ட
முடிபுனையா மன்னர்க் கெண்பது
வணிகர்க் கெழுபது மற்றவை யோர்க்குத்
துணியிலறு பத்தைஞ்சு சொல்லும்.”     2

(நவநீதம்-34-ஆம் செய்யுளுரை மேற்கோள்).

“சந்தத் தொருபது பல்சந்த மாலை,
அந்த வெள்ளை யைம்பதா னெழுபதா
னென்கவூர்ப் பேரோடுறுமா வியல்பே
அகவற் றனையும் அவ்வழி வரையார்.”     2அ

(நவநீதம்-37-ஆம் செய்யுளுரை மேற்கோள்).

“உரைத்த தசாங்க மாவன பத்தாக
நிரைத்து வருவது நேரிசை வெண்பா;
செங்கோல்
அமரரை வேந்தரைச் செப்புதல் சின்னப் பூவாம்.”     3

“ஏனையோர்க்குத் தசாங்கம்
அல்லா தனவென்ப இயல்புணர்ந் தோரே.”     4

நவநீதம்-39-ஆம் செய்யுளுரை மேற்கோள்).