30 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இருந்த சுந்தரமூர்த்தி நாயனார், தமது திருத்தொண்டத்தொகையில் காரிநாயனாரைக் குறிப்பிடுகிற படியி னாலே, இவர் காலம் 9-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலம் எனக் கொள்ளவேண்டும். 11. காரைக் குறவஞ்சி யாழ்ப்பாணத்துக் காரைத்தீவில் இருந்த சுப்பையர் என்பவர் இயற்றியது இந்நூல். இவர் கி.பி. 1795-இல் வாழ்ந்திருந்தவர். இவர் இயற்றிய காரைக் குறவஞ்சி கிடைக்கவில்லை. 12. கிளவித் தெளிவு இப்பெயரையுடைய நூல் ஒன்று இருந்ததென்பது. களவியற் காரிகையுரையினால் தெரிகிறது. இது அகப்பொருளைக் கூறுவது. இதன் ஆசிரியர் பெயர் முதலியன தெரியவில்லை, இது பெரிதும் வெண்பாவினாலும் ஆசிரியப் பாவினாலும் அமைந்த நூல். இப்போது கிடைத்துள்ள இந்நூற் செய்யுள்கள் இவை: அணங்கென்ன லாமோ வடியிரண்டு மண்மே லிணங்குங் குழையுடனே யேறிப் - பிணங்கிக் குவளை வழியிமைக்குங் கொய்மலர்த்தார் வாடு மிவளை மடநெஞ்சே யாம். 1 உள்ள படியுரையும் வண்டினங்கா ளோடைதொறுந் தெள்ளி நறவத் திசைபரக்கும்-வெள்ள வயல்கிடந்த தாமரைமேல் மையெழுதுஞ் செய்ய கயல்கிடந்த துண்டாகிற் கண்டு. 2 நின்னிற் பிரிந்தியா னாற்றுவனோ நின்மேனி பொன்னிற் பசந்து புலம்புவதென்-தன்னின் மயிர்பிரிந்தா லென்னாகு மானமா மாயு முயிர்பிரிந்தா லென்னா முடம்பு. 3 நின்னுடைய கூந்த னிறத்தால் நிறைவளையா யென்னுடைய வூரு மிருளாகு - நின்னுடைய முத்தனைய வெள்ளை முறுவலா லென்மலைய மத்தனையும் வெள்ளைநில வாம். 4 |