மறைந்துபோன தமிழ் நூல்கள் | 31 |
தேயு மருங்குலாள் சேலனைய கண்கண்டு நீயு நெறிதளர்ந்து நிற்றியா-லாயு மறிவெங்கே யல்லா லருங்குணங்க ளான செறிவெங்கே திண்சிலம்பா செப்பு. 5 காதுடனே காதுங் கயலிரண்டுஞ் செங்கமலப் போதுடனே நின்று புடைபெயரத் - தாதுடனே வண்டாடுஞ் சோலை மயில்போல் வரிப்பந்து கொண்டாட நான்கண்டேன் கொம்பு. 6 முருக்கின் புதுமலரால் முல்லை நகையால் நெருக்கியெழுஞ் செவ்விள நீராற் - குருக்கொடியா னான்ற குழைமுகத்தா னானயந்த நன்னுதலைப் போன்ற துயர்பூம் பொழில். 7 செய்ய மலரிற் றிருமகளே யென்றுன்னை யைய முறுகின்றே னல்லையே - லுய்ய வுரைதந் தருளாயுயிர் வருமோ போனால் விரைதந்த மேனியாய் மீண்டு. 8 வந்தெ னுடலி னுயிர்வாங்க வாணுதலாய் சந்த வனமுலையே சாலாதோ-பைந்தளிரால் நின்கண் புதைத்தனையே நின்வடிவெ லாம்புதைய வென்கண் புதைத்தருளா யின்று. 9 செய்யவாய் நுண்மருங்குற் சிற்றிடைப் பேரமைத்தோட் பையர வல்குற் பணைத்தேந்தும்-வெய்யமுலைக் காரே துவர்வாய்க் கருங்கூந்தற் காரிகையீர் ஊரேது சொல்லீர் உமக்கு. 10 நெருநலு முன்னா ளெல்லையு மொருசிறைப் புதுமை யாதலிற் கிளத்த னாணி நேரிறை வளைத்தோளுன் றோழி செய்த வாருயிர் வருத்தங் களையா யோவென வெற்குறை யுறுதி ராயிற் சொற்குறை யெம்பதத் தெளியளோ மடந்தை |