32 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
யின்ப வாழ்க்கைய ளிவண்மன் னெமக்கே. 11 மாணெழி லண்ணல் வாங்கலம் யாமெஞ் சேணுயர் சிலம்பின் யாங்கணுங் காணல மன்னோ கமழ்பூந் தழையே. 12 மாமலைச் சிலம்ப மயிலேர் சாயற் றேமொழி நிலைமை தெரிந்தபின் பூமென் றண்டழை கொள்குவன் புரிந்தே. 13 காணாய் தோழிநம் மேனற் றண்புனம் பேணா மன்னர் போய்ப்புறங் கொடுத்தென வல்வேற் றானை வெள்வரிச் செவ்வாய்ப் பாசினங் கவர்ந்துகொண் டனவே. 14 தந்து நீயளித்த தண்டழை காண்டலும் வந்தன ளெதிர்ந்த மடந்தை நெஞ்சம் மண்மிசை விளங்கிய வழுத்தூர் மதிதர னுண்ணிய றமிழி னுழைபொருள் துளித்த வாய்மொழி யமிழ்த மடுத்தவர் மனமென யானிலை பெற்றன் றியானறிந் திலனே. 15 கழைகெழு திண்சினைப் பன்மரந் துவன்றிய மழைதவழ் பூம்பொழில் யாவரும் விழைதகைத் தம்ம வியன்புன மருங்கே. 16 மணிநீர்ப் பொய்கை யணிபெற நிவந்த தாமரை யனையளித் தூமலர்க் கண்ணி ஞாயி றனையன் யானே யாவதும் வெஞ்சொல் யான்வியந் துரைப்பவு மெஞ்சாக் கவினிவ ளெய்த லானே. 17 அடும்பின் மென்கொடி துமியக் கடும்பகற் கொடுங்கழி மருங்கின் வந்தருள் நெடுந்தோ ளண்ணல்பின் சென்றதென் னெஞ்சே. 18 ஆய்கதிர்ச் செல்வ னத்தஞ் சேர்ந்தென நோய்கூர் நெஞ்சி னுழப்பப் போயின மாதோ புள்ளினம் பிரிந்தே. 19 |