பக்கம் எண் :

314மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

ஓங்கும் வெகுளி மதமான மாங்கார
நீங்கா வுலோப முட னிவ்வைந்தும்-பாங்காய
வண்ண முலைமடலாய் வானகத்தின் கூறென்றா
ரெண்ணிமிக நூலுணர்ந்தோ ரெண்.     6

ஒப்பார் பிராண னபான முதான னுடன்
றப்பா வியானன் சமானனே-யிப்பாலு
நாகன் றனஞ்செயன் கூர்மன் கிருகரன்
றீதிலாத் தேவதத்த னே.     7

இடைபிங் கலை சுழுமுனை காந்தாரி யத்தி
புடைநின்ற சிங்குவை சிங்கினி - பூடாவோ
டங்குரு கன்னி யலம்புடை யென்றுரைத்தார்
தங்குதச நாடிக டாம்.     8

பூத வகைகளோ ரைந்தாய்ப் பொறியைந் தாய்
வாதனையோ ரைந்தாய் மாருதமு-மேதகுசீர்ப்
பத்தாகு நாடிகளும் பத்தாகும் பாரிடத்தே
முத்திர்கு வித்தா முடம்பு.     9

இசைக்குப் பிறப்பிடம்.

துய்ய வுடம்பளவு தொண்ணுற்றா றங்குலியா
மெய்யெழுத்து நின்றியங்க மெல்லத்தான்-வையத்
திருபாலு நாற்பதோ டேழ்பாதி நீக்கிக்
கருவாகு மாதாரங் காண்.     10

ஆதாரம் பற்றி யசைவ முதலெ ழுத்து
மூதார்ந்த மெய்யெழுத்து முன்கொண்டு-போதாரு
முந்தி யிடைவளியா யோங்குமிடை பிங்கலையால்
வந்துமே லோசையாம் வைப்பு :     11

ஐவகைப் பூதமு மாய சரீரத்து
மெய்பெறநின் றியங்கி மெய்யெழுத்தாற்-றுய்ய
வொருநாடி நின்றியங்கி யுந்திமே லோங்கி
வருமா லெழுத்து டம்பின் வந்து.     12