மறைந்துபோன தமிழ் நூல்கள் | 313 |
வளைவா யருகொன்று முத்திரையாய் நீக்கித் துளையோகழி னின்ற விரல்கள் - விளையாட் டிடமூன்று நான்குவல மென்றார்கா ணேகா, வடமாரு மென்முலையாய்! வைத்து. 5 சரிக மபதநியென் றேழெழுத்தாற் றானங் வரிபரந்த கண்ணினாய்! வைத்துத்-தெரிவரிய வேழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிற்கும் சூழ் முதலாஞ் சுத்தத் துளை. 6 சாரீர வீணை பூதமுதற் சாதனத்தாம் புற்கலத்தின் மத்திமத்து நாதமுதலா மெழுத்து நாலாகி - வீதி வருவரத்தாற் றானத்தால் வந்து வெளிப்பட் டிருவாத்தாற் றோற்ற மிசைக்கு. 1 மண்ணுட னீர்நெருப்புக் கால்வான மென்றிவைதா மெண்ணிய பூதங்க ளென்றறிந்து - நண்ணிய மன்னர்க்கு மண்கொடுத்து மாற்றார்க்கு விண்கொடுத்த தென்னவர் கோமாளே தெளி. 2 செப்பிய பூதங்கள் சேர்ந்தோர் குறியன்றே யப்பரிசு மண்ணைந்து நீர்நாலா - மொப்பரிய தீயாகின் மூன்றிரண்ட காற்றம் பரமொன்று வேயாருந் தோளி விளம்பு. 3 மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற வைவாயு மாயவற்றின் மீதடுத்துத்-துய்ய சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தா லவைமுதற் புற்கல மாம். 4 (புற்கலம்-உடம்பு) பசிகோம்பு மைதுனங் காட்சிநீர் கேட்கை தெசிகின்ற தீக்குணமோ ரைந்து-மொசிகின்ற போக்கு, வரவுநோய் கும்பித்தன் மெய்ப்பரிசம் வாக்குடைய காற்றின் வகை. 5 |