312 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
யாழ்வகை பேரியாழ் பின்னு மகரஞ் சகோட முடன் சீர்பொலியுஞ் செங்கோடு செப்பினார் - தார்பொலிந்து மன்னுந் திருமார்ப வண்கூடற் கோமானே பின்னு முளவே பிற. 8 ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே நின்ற பதினான்கும் பின்னேழுங்-குன்றாத நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே மேல்வகை நூலோர் விதி. 9 கோட்டின தமைதியுங் கொளுவிய வாணியு மாட்டிய பத்தரின் வகையு மாடக முந் தந்திரி யமைதியுஞ் சாற்றிய பிறவு மூந்திய நூலின் முடிந்த வகையே 10 குழல்-வங்கியம் ஓங்கிய மூங்கி லுயர்சந்து வெண்கலமே பாங்குறு செங் காலி கருங்காலி-பூங்குழலாய் கண்ண னுவந்த கழைக்கிவைக ளாமென்றார் பண்ணமைந்த நூல்வல்லோர் பார்த்து. உயர்ந்த சமதலத் தோங்கிக் கானான்கின் மயங்காமை நின்ற மரத்தின் மயங்காமே முற்றிய மாமரந் தன்னை முதளடிந்த குற்றமிலோ ராண்டிற் கொளல் சொல்லு மிதற்களவு நாலைந்தாஞ் சுற்றளவு நல்விரல்க ணாலரையா நன்னுதலாய்-மெல்லத் துணையளவு நெல்லரிசி தூபமிடமாய் தும்பிட மாய வளைவலமேல் வங்கிய மென். இருவிரல்க ணீக்கி முதல்வாயேழ் நீக்கி மருவு துளையெட்டு மன்னும்-பெருவிரல்க ணாலங்சு கொள்க பரப்பென்ப, நன்னுதலாய்! கோலஞ்செய் வங்கியத்தின் கூறு. |