பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்311

முரிவரி

எழுத்த வியலு மிசையுந் தம்மின்
முரித்துப் பாடுதன் முரியெனப் படுமே.

யாழ்

மாடகம்

‘மாடக மென்பது வகுக்குங் காலைக்
கருவிளங் காழ்ப்பினை நல்விரல் கொண்டு
திருவயில் பாலிகை வடிவாக் கடைந்து
சதுர மூன்றகத் துளையிடற் குரித்தே.3     1

இணைநரம்பு.

இணையெனப் படுவ கீழு மேலு
மணையத் தோன்று மளவின வென்ப.3     2

கிளைநரம்பு

கிளையெனப் படுவ கிளக்குங் காலை
குரலே யிளியே துத்தம் விளரி
கைக்கிளை யெனவைந் தாகு மென்ப.3     3

பகை நரம்பு

நின்ற நரம்பிற் காறு மூன்றுஞ்
சென்றுபெற நிற்பது கூட மாகும்.3     4

கண்ணிய கீழ்மூன் றாகி மேலு
நண்ணல் வேண்டு மீரிரண்டு நரம்பே.4     5

குரலே துத்த மிளியிவை நான்கும்
விளரி கைக்கிளை மும்மூன் றாகித்
தளராத் தார முழையிவை யீரிரண்
டெனவெழு மென்ப வறிந்திசி னோரே.4     6

தாரத்துட் டோன்று முழையுழை யுட்டோன்று
மோருங் குரல் குரலி னுட்டோன்றிச் - சேருமிளி
யுட்டோன்றுந் துத்தத்துட் டோன்றும் விளரியுட்
கைக்கிளை தோன்றும் பிறப்பு.5     7