310 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
(வினயம் - தேவபாணி) வரிப்பாட்டு சிலப்பதிகாரம், கானல்வரி உரையில் அரும்பதவுரையாசிரியர் காட்டிய நூற்பாக்கள். கூடைச் செய்யுள். கூடை யென்பது கூறுங் காலை நான்கடி யாகி யிடையடி மடக்கி நான்கடி யஃகி நடத்தற்கு முரித்தே. 1 வாரச் செய்யுள். வார மென்பது வகுக்குங் காலை நடையினு மொலியினு மெழுத்தினு நோக்கித் தொடையமைந் தொழுகுந் தொன்மைத் தென்ப. 2 முகமுடைவரி நிலமுத லாகிய வுலகியல் வரிக்கு முகமாய் நிற்றலின் முகமெனப் படுமே. 3 சிந்து நெடிலுஞ் சேரினும் வரையார். 4 சார்த்துவரி பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரொடுஞ் சார்த்திப் பாடிற் சார்த்தெனப் படுமே. 5 முரிச்சார்த்து முரிந்தவற ... ... ... குற்றெழுத் தியலாற் குறுகிய நடையாற் யெற்ற வடித்தொகை மூன்று மிரண்டுங் குற்ற மில்லெனக் கூறினர் புலவர். 6 நிலைவரி முகமு முரியுந் தன்னோடு முடியு நிலையை யுடையது நிலையெனப் படுமே. 7 |