பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்309

யியக்கமு நடையு மெய்திய வகைத்தாய்ப்
பதினொ ராடலும் பாணியு மியல்பும்
விதிநான்கு தொடர்ந்து விளங்கிச்செல் வதுவே.     5

விளையாட்டு

விளையாட் டென்பது விரிக்குங் காலைக்
கிளவிய வகையி னெழுவகை யெழாலு
மளவிய தகைய தாகு மென்ப.     6

கையூழ்

கையூ ழென்பது கருதுங் காலை
யெவ்விடத் தானு மின்பமுஞ் சுவையுஞ்
செவ்விதிற் றோன்றிச் சிலைத்துவர லின்றி
நடைநிலை திரியாது நண்ணித் தோன்றி
நாற்பத் தொன்பது வனப்பும் வண்ணமும்
பாற்படத் தோன்றும் பகுதித் தாகும்.     7

குறும்போக்கு

துள்ளற் கண்ணுங் குடக்குத் துள்ளும்
தள்ளாதாகிய வுடனிலைப் புணர்ச்சி
கொள்வன வெல்லாங் குறும்போக் காகும்.     8

யாழ் வாசிக்கும் முறமை

சிலம்பு, 8-26 அடி உரையில் அரும்பதவுரையாசிரியரும். அடியார்க்கு நல்லாரும் மேற்கோள் காட்டியது:

நல்லிசை மடந்தை நல்வேழில் காட்டி
யல்லியம் பங்கயத் தயனினிது படைத்த
தெய்வஞ் சான்ற தீஞ்சுவை நல்யாழ்
மெய்பெற வணங்கி மேலோடு கீழ்புணர்த்
திருகையின் வாங்கி யிடவயி னிரீஇ
மருவிய வினய மாட்டுதல் கடனே.