308 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
பண்ணல் வலக்கைப் பெருவிரல் குரல்கொளச் சிறுவிரல் விலக்கின் றிளிவழி கேட்டும் ... .. ... .. ... இணைவழி யாராய்ந் திணைகொள முடிப்பது விளைப்பரு மரபிற் பண்ண லாகும். 1 பரிவட்டணை பரிவட் டணையி னிலக்கணந் தானே மூவகை நடையின் முடிவிற் றாகி வலக்கை யிருவிரல் வனப்புறத் தழீஇ உடக்கை விரலி னியைவ தாகத் தொடையொடு தோன்றியுந் தோன்றா தாகியு நடையொடு தோன்று நயத்த தாகும். 2 ஆராய்தல் ஆராய்த லென்ப தமைவாக் கிளப்பிற் குரன்முத லாக விணைவழி கேட்டு மிணையி லாவழிப் பயனொடு கேட்டுந் தாரமு முழையும் தம்மிற் கேட்டும் விளரி கைக்கிளை விதியுளிக் கேட்டுந் தளரா தாகிய தன்மைத் தாகும். 3 தைவரல் தைவர லென்பது சாற்றுங் காலை மையறு சிறப்பின் மனமகிழ் வெய்தித் தொடையொடு பட்டும் படாஅ தாகியு நடையொடு தோன்றி யாப்புநடை யின்றி யோவாச் செய்தியின் வட்டணை யொழுகிச் சீரேற் றியன்று மியலா தாகியும் நீரவாகு நிறைய தென்ப. 4 செலவு செலவெனப் படுவதன் செய்கை தானே பாலை பண்முறை திறமே கூடமென நால்வகை யிடத்து நயத்த தாகி |