பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்307

உற்சங்கம்

உற்சங்க மென்ப துணருங் காலை
யொருகை பிறைக்கை யொருகை யராளந்
தெரிய மணிக்கட்டி லேற்றிவைப் பதுவே.     51

புட்பபுடம்

புட்பபுட மென்பது புகலுங் காலை
யொத்த விரண்டு குடங்கையு மியைந்து
பக்கங் காட்டும் பான்மைத் தென்ப.     52

மகரம்

மகர மென்பது வாய்மையி னுரைப்பிற்
கபோத மிரண்டு கையு மகம்புற
மொன்ற வைப்பதன் றுரைத்தனர் புலவர்.     53

சயந்தம்

இதன் நூற்பா கிடைக்கவில்லை.     54

அபயவத்தம்

அபயவத் தம்மே யறிவுறக் கிளப்பின்
வஞ்சமில் சுகதுண்ட மிருகையு மாட்சியி
னெஞ்சுற நோக்கி நெகிழ்ந்துநிற் பதுவே.     55

வருத்தமானம்

வருத்த மானம் வகுக்குங் காலை
முகுளக் கையிற் கபோதக் கையை
நிகழச் சேர்த்து நெறியிற் றென்ப.
அவைதாம்     56

எழிற்கை யழகே தொழிற்கை தொழிலே
பொருட்கை கவியிற் பொருளா கும்மே.     57

இசை

சிலம்பு, கானல்வரியின் பழைய அரும்பதவுரையாசிரியர் மேற்கோள் காட்டிய நூற்பாக்கள்.