306 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
புட்பாஞ்சலி புட்பாஞ் சலியே பொருத்தவிரு குடங்கையுங் கட்டி நிற்கும் காட்சிய தென்ப. 43 பதுமாஞ்சலி பதுமாஞ் சலியே பதும கோசிக மெனவிரு கையு மியைந்து நிற்பதுவே. 44 கபோதம் கருதுங்காலைக் கபோத விணைக்கை யிருகையுங் கபோத மிசைந்துநிற் பதுவே. 45 கற்கடகம் கருதுங் காலைக் கற்கட கம்மே தெரிநிலை யங்குலி யிருகையும் பிணையும். 46 சுவத்திகம் சுவத்திக மென்பது சொல்லுங் காலை மணிக்கட் டமைந்த பதாகை யிரண்டையு மணிக்கட் டேற்றி வைப்ப தாகும். 47 கடகாவருத்தம் கருதிய கடகா வருத்தக் கையே யிருகையும் கடக மணிக்கட் டியைவது. 48 நிடதம் நிடத மென்பது நெறிப்படக் கிளப்பின் முட்டி யிரண்டுகை யுஞ்சம மாகக் கட்டி நிற்குங் காட்சித் தென்ப. 49 தோரம் தோர மென்பது துணியுங் காலை யிருமையும் பதாகை யகம்புற மொன்ற மருவிமுன் றாழும் வழக்கிற் றென்ப. 50 |