பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்305

கபோதம்

காணுங் காலைக் கபோத மென்பது
பேணிய பதாகையிற் பெருவிர னிமிரும்.     38

மகர முகம்

மகரமுக மென்பது வடிக்குங் காலைச்
சுட்டொடு பெருவிரல் கூட வொழிந்தவை
யொட்டி நிமிர்ந்தாங் கொன்றா வாகும்.     39

வலம்புரி

வலம்புரிக் கையே வாய்ந்த கனிட்ட
னலந்திகழ் பெருவிர யைமுற நிமிர்ந்து
சுட்டுவிரன் முடங்கிச் சிறுவிர னடுவிரல்
விட்டு நிமிர்ந் திறைஞ்சும் விதியிற் றென்று
கூறுவர் தொன்னூற் குறிப்புணர்ந் தோரே.     40

பிணையல் (இணைக்கை)

எஞ்சுத லில்லா விணைக்கை யியம்பி
லஞ்சலி தன்னொடு புட்பாஞ் சலியே
பதுமாஞ் சலியே கபோதங் கற்கடகம்
நலமாஞ் சுவத்திகங் கடகா வருத்த
நிடதந் தோரமுற் சுங்க மேம்பட
வுறுபுட் பபுட மகரஞ் சயந்த
மந்தமில் காட்சி யமய வத்த
மெண்ணிய வருத்த மானந் தன்னொடு
பண்ணுங் காலைப் பதினைந் தென்ப.     41

அஞ்சலி

அஞ்சலி யென்ப தறிவுறக் கிளப்பி
னெஞ்ச லின்றி யிருகையும் பதாகையால்
வந்தகம் பொருந்து மாட்சித் தென்றன
ரந்தமில் காட்சி யறிந்திசி னோரே.     42