பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்39

களவியற் காரிகை யுரையாசிரியர் கீழ்க்காணும் செய்யுள் சிற்றெட்டகத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார்:

இனையல் வாழி யெம்மூர் மலர்ந்த
பழனத் தாமரை கெழீஇ வண்டுநின்
கண்ணென மலர்ந்த காமர் சுனைமலர்
நறுங்கண்ணி நாளு நலனுக ரும்மே1.      1

இந்தச் சிற்றட்டகச் செய்யுள் ‘தமிழ்நெறிவிளக்க’ உரையிலும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.’

இதன்கீழ் இன்னொரு செய்யுளின் முதல் இரண்டடிகள் செல்லரித்துப்போனமையால், அச்செய்யுளை இங்கு எழுதவில்லை.

கண்ணுஞ் செவ்வரி பரந்தன்று நுதலு
நுண்வியர் பொறித்து வண்டார்க் கும்மே
வாங்கமை மென்றோண் மடந்தை
யாங்கா யினள்கொ லென்னுமென் னெஞ்சே.      2

இச்செய்யுளை இளம்பூரண அடிகள் (தொல்., பொருள். களவியல் 24ஆம் சூத்திர உரையில்) மேற்கோள் காட்டுகிறார்.

நிலையிருங் குட்டத்தி னெடுந்திமி லியக்கி
வலையிற் றந்த வாடுமீ னுணங்கல்
விலையோ விலையென வேட்பக் கூறி
நெல்லொடு பெயரு நிரம்பா வாழ்க்கை
வேட்டக் கிளையொடு வினவுதி ரெனினே
பூட்டுவிற் புரையும் புருவவாண் முகத்துப்
பிறைகிடந் தன்ன நுதலிவ
ளிறைவளைப் பணைத்தோ ளெய்தலோ வரிதே.      3

வாரா தீமோ சார னாட
வுறுபுலி கொன்ற தறுகண் யானை
யாறுகடி கொள்ளு மருஞ்சுர
மூறுபெரி துடையது தமியை நீயே.      4

இந்தச் செய்யுள் ‘தமிழ்நெறி விளக்க’ உரையிலும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.