| 40 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
ஐய வாழியோ வைவா யேனப் புன்றலை மடப்பிடி புலியென வெரூஉம் பொன்மருள் வேங்கை யெம்மூர் போல ஆடவர்ப் பிரிந்தோர்க் கலைக்கும் வாடையு முளதோநின் பெருங்கன் னாட்டே. 5 முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலைய னெள்வேற் கண்ணி முலையினம் வாரா முதுக்குறைந் தனளே. 9 எம்மூ ரல்ல தூர்நணித் தில்லை வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தனன் சேந்தனை சென்மோ பூந்தார் மார்ப இளையள் மெல்லியள் மடந்தை யரிய சேய பெருங்கல் லாறே. 7 இந்தச் செய்யுள்களை நச்சினார்க்கினியரும் (தொல். பொருள். 40ஆம் சூ.) இளம்பூரணரும் (தொல். பொருள். அகத்திணை, 43ஆம் சூ.), இறையனாரகப்பொருளுரையாசியரும் (23ஆம் சூ.) மேற்கோள் காட்டியுள்ளார்கள். கீழ்க்காணும் செய்யுள்களும் சிற்றெட்டகச் செய்யுள்களென்று கருதப்படுகின்றன: உள்ளார் கொல்லோ தோழி சிள்ளெனப் பருந்துவீழ்ந் தெடுத்த பைந்தலை யரவங் காதறு கவண தேய்க்குந் தீதுறு கள்ளியங் காடிறந் தோரே. 8 உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை யலங்குகுலை யீந்தின் சிலம்பிபொதி செங்காய் துகில்பொதி பவள மேய்க்கு மகில்படு கள்ளியங் காடிறந் தோரே. 9 இச்செய்யுள்களை நச்சினார்க்கினியரும் (தொல். சொல். 288ஆம் சூ.), யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் (19ஆம் சூ.), யா. காரிகை உரையாசிரியரும் (11ஆம் சூ.) மேற்கோள் காட்டியுள்ளனர். |