| 50 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
மங்கையர்தங் கண்ணால் மயங்கினார் வெள்ளெலும்புந் துங்க வெருக்குந் தொடுத்தணிந் - தங்கமெலாம் வெந்தேறு சாம்பல் மிகவணிந்து வீதிதொறும் வந்தேறி யூர்வர் மடல். 16 செம்ம லொருவன் செறிபூந் தழையேந்தி மம்மர் பெருகி வனப்பழித்து - நம்முடைய நன்பூம் புனமகலான் நாமதற்குச் செய்வதுமற் றென்பூங் குழலா யியம்பு. 17 வங்கமு மீனெறியு மாக்களு மீன்சுறவும் பொங்குந் திரையும் பொருகடலு - மிங்கிவை தேர்த்திரளுங் காலாளுந் திண்களிறும் வெம்பரியும் போர்க்களமும் போலும் பொலிந்து. 18 வட்ட முலையில் மலர்க்கண்ணில் வார்குழலிற் பட்ட படியைப் பகர்வதோ - மட்டுவிரி கந்தநறுங் கூந்தற் கனங்குழைக்குக் காவலநீ தந்தநறுஞ் சாரற் றழை. 19 தாது விரிபொழிலுந் தண்டுறையும் புண்டரிகப் போது விரிகமழ்நீர்ப் பொய்கைகளு - மீது நெருங்குங் குருகினமு நெஞ்சுருக நம்மை யுருக்குந் தனியிடமொன் றுண்டு. 20 முல்லை மலர்நின் முடிமலராக் கொண்டியா னொல்லை வருவ னொருபொருப்பன் - றில்லைநகர் ஆரணங்கே யிங்கேநி லங்கே வரின்மன்னுஞ் சூரணங்கே செய்யுந் தொடர்ந்து. 21 எவ்விடத் தென்செய்த தென்றறியே னிப்போதைக் கிவ்விடத்தி லென்னுழைவந் தெய்தாதே - வெவ்வினையேன் இன்னலே கூர வினிதளித்தார் தேரின்பின் நென்னலே போனவென் னெஞ்சு. 22 அன்னை நெருந லணியிழையாள் கொங்கையையும் என்னையும் நோக்கி யிருவரையும் - புன்னை வளையாடு கானல்வாய் மானனையீர் இன்று விளையாட லென்றாள் விரைந்து. 23 |