| மறைந்துபோன தமிழ் நூல்கள் | 51 |
கள்ளவிழுங் காவி முடித்துக் கமழ்பசுஞ்சாந் தள்ளி முடிமே லழகெழுதிப் - புள்ளுறங்கும் வேங்கை மரநிழற்கீழ் நிற்பேம் வியன்சிலம்பா நாங்கள் விளையாட நன்கு. 24 மொய்யிருளி னீரே முளரி யகந்திறந்து செய்ய வடியிற் சிலம்பொதுக்கிப் - பையவொரு மின்வந்த தென்ன வெறுந்தனியே வந்தவா வென்வந்து சொல்லீ ரெமக்கு. 25 அன்னநடைப் பேதை யருமை யறியாதே என்னை வருத்துகின்ற தென்கொலோ - துன்னிருட்கண் வஞ்சமே யன்ன மலர்விழியா லீடழியும் நெஞ்சமே கட்டுரையாய் நீ. 26 ஊர்துயிலி னாய்துயிலா வொண்டொடி யூர்காக்கும் பேர்துயிலு மாறொருகாற் பெற்றாலும் - நேர்துயிலா ளன்னை நெடுநிலா வல்லும் பகலாகு மென்னை வருவதுநீ யிங்கு. 27 கல்லதருங் கான்யாறு நீந்திக் கரடிகளும் கொல்கரியுஞ் செய்யுங் கொலைபிழைத்து - வல்லிருளிற் சாரன் மலைநாட தன்னந் தனிவந்து சேரல் சிறியா டிறத்து. 28 வார லிருபொழுதும் வந்தால் மலைநாட வேரல் புனைதிருந்தோள் மெல்லியலாள் - சூரல் வழியிடையூ றஞ்சு மிரவெலா மன்ன பழியிடையூ றஞ்சும் பகல். 29 உன்னையு நீத்தகன்றா ருண்டோ வுடல்கருகிப் புன்னை கமழும் பொருகடலே - யென்னைப்போல் நெஞ்சா குலம் பெருகி நீயு மிரவெல்லாந் துஞ்சாத தென்கொலோ சொல்லு. 30 பந்தி யிளமிளகு பாராதே தின்றனைய மந்தி தளரு மலைநாட - முந்தருவி சோர வரிநெடுங்கண் சுற்றும் பனிவாடை யீர மெலிவா ளிவள். 31 |