தமிழ் இலக்கிய வரலாறு - கிறித்துவமும் தமிழும் | 123 |
படிக்கும், கர்த்தர் தயவுள்ளவர் என்கிறதை ருசித்துப் பார்த்து இயேசு கிறிஸ்துவை அறியும் அறிவிலும் கிருபையிலும் வளர்ந்தேறி வரும்படிக்கும், பராபரன் கட்டளையிட்டு ஆசீர்வாதந் தந்தருளக் கடவர்.” ஆயத்த செபம் ”சகல ஞானத்தையும் ஈகிறவரே, நான் என் இருதயத்தை எப்படி ஆராய்ந்தாலும், உமது விருந்துக்கு என்னை எப்படி எத்தனப் படுத்தினாலும், உம்முடைய உதவியும் ஆசீர்வாத முமில்லாமல் என் முயற்சிகளெல்லாம் விருதாவாய்ப் போகும். நீரே என் கண்களைத் திறந்து என் இருதயத்தை இளகச்செய்யாவிட்டால் என் பாவங்களை நான் அறிந்துகொள்வதெப்படி? நீரே விசுவாசந் தராவிட்டால், நான் கிறிஸ்து இரட்சகரின் கிருபையைச் சார்ந்து அவர் மேலேயே முழு நம்பிக்கையை வைப்பதெப்படி? நீரே உம்முடைய ஆவியினாலே என்னைச் சுத்திகரியாவிட்டால், அசுத்தமும் தீவினையும் என்னில் நிலைக்கும். ஆகையால் என் தேவனே உம்மிடத்தில் வருகிறேன். நீரே என் இருதயத்தை எனக்குக் காண்பித்து, உமது பந்தியைச் சேருதற்கேற்ற குணங்களையும் ஆயத்தத்தையும் எனக்குத்தாரும். கேட்கிற எனக்குக் கொடும்; தேடுகிற நான் கண்டடையச் செய்யும், தட்டுகிற எனக்கு வாசலைத் திறந்தருளும். ஆமன்.” அடிக்குறிப்புகள் 1. L.L.D. 2. D.D. 3. A comparative Grammar of the Dravidian Languages |