பெர்ஸிவல் ஐயர் (1803 - 1872) (Rev. pater Percival) வெஸ்லியன் மிஷன் சங்கத்தைச் சேர்ந்த இவர் கி.பி. 1833-ல் யாழ்ப்பாணம் வந்தார். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரிடம் தமிழ்க் கல்வி பயின்றார். 1835-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை நிறுவினார். கிறுத்துவ மத சம்பந்தமான சில சிறு நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டார். தமிழில் வழங்கும் பழமொழிகளைத் திரட்டி (1873 பழமொழிகள்)ஆங்கில மொழி பெயர்ப்புடன் 1843-ஆம் ஆண்டு அச்சிட்டார். ஆங்கிலத் தமிழ் அகராதியையும் எழுதி வெளியிட்டார். சென்னையில் 1855-ஆம் ஆண்டில் தினவர்த்தமானி என்னும் வாரப் பத்திரிக்கையை நடத்தினார். தெய்லர் ஐயர் (1796 -1878) (Rev. W. Taylor) தமிழில் சிறு நூல்களை எழுதினார். வேதாத்தாட்சி என்னும் நூலை எழுதி 1834-இல் சென்னையில் அச்சிட்டார். ஆங்கிலேயர் தமிழ் கற்பதற்காக 46 பக்கமுள்ள ஒரு சிறு நூல் எழுதி 1861-இல் அச்சிட்டார். வெற்றி வேற்கைய ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஜோகன் பிலிப் பெப்ரீசியஸ் (1711 -1791) (Rev. J. Ph. Fabricius) இவர் ஜெர்மனி தேசத்தவர். கி.பி. 1711-இல் பிறந்தார். தரங்கம் பாடிக்கு 1740-இல் வந்து இரண்டு ஆண்டு அங்கிருந்து பிறகு சென்னைக்கு வந்தார். 1791-இல் காலமானார். தமிழ் கற்றவர். இவருடைய தமிழ் சொற்பொழிவு மெச்சத்தக்கனவாம். இவர் எழுதிய பிரார்த்தனைப் புத்தகம் நடையழகும் சொல்நோக்கும் பொருள் 1. Pilgrim's progress. |