பக்கம் எண் :

68மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 17

ஏற்படுத்தப்பட்டது. இன்னும், பாளையங்கோட்டை, நாகர்கோயில், நெய்யூர், யாழ்ப்பாணம் முதலிய ஊர்களிலும் கிறித்துவ மிசனரிமார், சென்ற 19-ஆம் நூற்றாண்டில் அச்சுக்கூடங்களை நிறுவி, விஞ்ஞான நூல்களையும் ஏனைய புத்தகங்களையும் அச்சிட்டு வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். இவ்வாறு சென்ற நூற்றாண்டில் வெளிவந்த விஞ்ஞான நூல்களை யாம் அறிந்தவரையில் கீழே தருகிறோம்.

பூகோள நூல்

பூமி சாத்திரம்: இதை இரேனியுஸ் ஐயர் 1832-இல் எழுதிச் சென்னையில் அச்சிட்டார். இதுதான் முதன் முதல் தமிழில் எழுதப்பட்ட பூகோள நூல் எனத் தெரிகிறது. கத்ரி2 என்பவர் எழுதிய “ஆரம்பப் பூகோளம்”3 என்னும் நூலை ஆதாரமாகக் கொண்டு இவர் இந்த நூலை எழுதினார்.

பூமி சாத்திரச் சுருக்கம் (1846), பூமிசாத்திரக் குறிப்பு. இவ்விரண்டு நூல்களும் நாகர்கோயில் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப் பட்டன. பூமி சாத்திரப் பொழிப்பு இலங்கையிலும், பூமி சாத்திரப் பாடங்கள் புதுச்சேரியிலும் அச்சிடப்பட்டன. இவையன்றி, இன்னும் அநேக பூமி சாத்திர நூல்கள் சென்ற நூற்றாண்டில் ஏராளமாக வெளியிடப் பட்டன.

தேச சரித்திரக் கதைகள்

உலக சரித்திரம் (1881), இங்கிலாந்து தேச சரித்திரம் (1858), இந்து தேச சரித்திரம், பல தேச சரித்திரச் சுருக்கம், உரோம சரித்திரம்,4 இவை சென்னைப் பாடசாலைப் புத்தகச் சங்கத்தாரால் வெளியிடப் பட்டவை.

பிரிட்டிஷ் தேச சரித்திரம் (1855),5 புராதனச் சரித்திரச் சருக்கம்,6 (1851) இவ்விரு புத்தகங்களும் ரெவரண்டு ஹாப்ஸ் என்பவரால் எழுதிப் பாளையங்கோட்டை அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டன.

உலக சரித்திர மாலை,7 (1830) இது டாக்டர் ஷிமிட்8 என்பவரால் எழுதப்பட்டுச் சென்னை சி.எம்.எஸ். அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப் பட்டது.

சாதாரண இதிகாசம்9: இஃது ஆர்னால்ட்10 என்பவரால் எழுதப்பட்டு, 1858-இல் யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிசன் அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. பூர்விக சரித்திரம்11 ரெவரண்டு