பக்கம் எண் :

122மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 18

தமிழில் வழங்கிய கைதை என்னுஞ் சொல், திராவிடக் குழு மொழிகளாகிய துளு, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெவ்வேறு உருவத்தில் திரிந்து வழங்குவதைக் காண்கிறோம். ஆனால், இக்காலத்தில் கைதை என்னுஞ் சொல் தமிழில் வழக்கிழந்துவிட்டது.

ஆரிய இன மொழியாகிய சம்ஸ்கிருதத்தில் கைதை என்னும் திராவிட மொழிச்சொல் வழங்குகிறது. கேதக, கேதகீ என்னும் சொற்கள் சமஸ்கிருதத்தில் வழங்கப்படுகின்றன. இச்சொற்களைச் சம்ஸ்கிருதக் காரர் தெலுங்கு அல்லது கன்னட மொழிகளிலிருந்து கடனாகக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. - சமஸ்கிருத மொழி.

திராவிட இனமொழிகளிலிருந்து பெற்றுக்கொண்ட பல சொற்களில் கோதையும் ஒன்று..