184 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 18 |
தேவர் பண்ணிய தீந்தொடை இன்சுவை மேவர் தென்தமிழ் மெய்ப்பொரு ளாதலின் கோவத் தன்னமென் சீறடிக் கொம்பனாள் பூவர் சோலை புகுவலென் றெண்ணினான் - (சீவக சிந். பதுமை. 163) என்று தேவர் வழங்கியுள்ளார். இப்பாடலில் இடம் பெற்றுள்ள, ‘மேவர் தென்தமிழ்’ என்னும் தொடருக்கு, ‘நாடக வழக்கும், உலகியல் வழக்கும் பொருந்துதல் வரும் அகப்பொருளில்’7 என்று நச்சினார்க்கினியர் விளக்கம் தந்துள்ளமை யும் இங்குக் கருதற்பாலது. தமிழியல் வழக்கு யாப்பருங்கலம் ஒழிபியலில், ‘மாலைமாற்றே சக்கரஞ் சுழிகுளம்’ என்று தொடங்கும் சூத்திரத்தின் விருத்தியுரையில் எட்டு வகையான மணங்கள் சுட்டப்படுகின்றன. அப்பகுதியில் களவொழுக்கத்தினை விளக்குவதற்கு, அவிநயனார் இயற்றிய செய்யுள் ஒன்று மேற் கோளாகக் காட்டப்பட்டிருக்கிறது. அச்செய்யுளின், முன்செய் வினையது மறையா வுண்மையின் ஒத்த இருவரும் உள்ளக நெகிழ்ந்து ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. மெய்யுறு வகையு முள்ளல்ல துடம்புறப் படாத் தமிழியல் வழக்க மெனத் தன்னன்பு மிகை பெருகிய களவெனப் படுவது கந்தருவ மணமே8 என்னும் பகுதியில், ‘தமிழியல்’ என்னும் சொல் அகப் பொருளைச் சுட்டுவதைக் காணலாம். தமிழ் நெறி ‘தமிழ் நெறி விளக்கம்’ என்னும் அகப்பொருள் இலக்கண நூல் ஒன்று உளது. அந்நூலுள், ‘அன்பின் ஐந்திணை’ ஒழுக்கம், தமிழ் நெறி என்று போற்றப்படுவதும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாகும். மேற்கண்ட சான்றுகள், அகப்பொருளைத் தமிழ் என்னும் சொல்லால் சுட்டும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருவதைத் தெளிவுறுத்துகின்றன.. |