தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு | 199 |
கல்லாடனார் இயற்றிய செய்யுட்கள், அகநானூற்றில் (அகம். 9. 83, 113, 171, 199, 209, 333) ஏழும், குறுந்தொகையில் (குறும். 260, 269) இரண்டும், புறநானூற்றில் (புறம். 23, 25, 371, 385, 391) ஐந்தும் ஆகப் பதினான்கு செய்யுட்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மேலே கூறிய மாங்குடி மருதனார், நக்கீரனார் இவர்களைத் தவிர இடைக்குன்றூர் கிழாரும், குறுங்கோழியூர் கிழாரும், பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியாரும், கல்லாடனார் காலத்தில் இருந்த புலவர் ஆவர்.. |