பக்கம் எண் :

26மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 19

ஸ்ரீ

ஸ்ரீஜிநாயநம :

1மயிலாப்பூர் பதிகம் - 1

அறுசீர் அடி ஆசிரிய விருத்தம்

பெருகலர் மாமழை பெய்தொரு சுரர்முகில் பெயர்வது போலிமையோர்
அருமலர் தூவிய அலைகடல் மேல்வரு அரிகுல நாயகரூர்
கருமலி ஆலய மொடுமணி மாளிகை கடியிதழ் தாதெனவத்
திருமலி தாமரை கருமலி பொன்மலி திருமயி லாபுரியே.     1

துருவம ரைவுடல் கொடுசுழல் வோர்தம துணையடி சேரினவர்
குருவநன் மாமணி யவைதிசை யேதரு மரிகுல நாயகரூர்
அருவநன் மாமணி யொளிகலன் வானவர் அருநர்செய் மாதவருநீள்
தெருளெனு மாறுகல் சிவணிமுன் னீர்புணர் திருமயி லாபுரியே.     2

ஒளிதரு தண்ணிழல் குலவியோ ரோசனை யுயரமொ ரோசனையிற்
களிதரு நாண்மல ரணியும சோகுடை யரிகுல நாயகரூர்
விளிதரு மூடமும் வினையும் விடாமயல் வீடரு நால்வகையிற்
றெளிதரு சாவகர் செழுமனை யேமலி திருமயி லாபுரியே.     3

நிமிரும சோகமு நினைவில சோகமு நெடுமொழி யாகியபோழ்
துமிழ்வள வாடக விடமுன மேவிய வரிகுல நாயகரூர்
இமிழ்திரை வேலையி னிடைமண லாகிய வொளிநீ; அவணுடையும்
திமிரம தாமென வெறிதிரை நீர்பெயர் திருமயி லாபுரியே.     4

வரிவளை யார்திரு மருவல ராய்நல மருவிய செல்வமதா
யரிவையை மூவுல கலரெழ நேர்புண ரரிகுல நாயகரூர்
விரியுமு னாண்மதி வெயினிலை யாகவா முதல்வெளி யாயுறைய
திருவிதை யோகிக ளிருவினை தீர்தருந் திருமயி லாபுரியே.     5