நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள் | 27 |
வினையிருள் போழ்வன மிசையல சோதியை விலையுமி லாதனதா மனையமு மாமணி யருளின மாள்கொளு மரிகுல நாயகரூர் நனையணி ஞாழலி னறைகமழ் வீகளை வரியளி தும்பிகள் சேர்? தினையெனு மீமிசை சிறுதுளி ரேதரு திருமயி லாபுரியே. 6 உவ்வுடை நாண்மதி யொளிமுக வாணுதல் உழைவிழி யேழையர்மேல் அவ்வுடை யாரரு நாருடை யாரெனு மரிகுல நாயகரூர் நவ்வுடை யார்துகி னகிவினை யோதிம நடைநறை நாறுகுழல் இவ்வுடை யாமொழி யவர்மலி பொன்மலி திருமயி லாபுரியே. 7 பவகத மாகிய பகைபசி நோய்பல பழவினை வேரறுவித் தவகத மாகிய வகிலவ சோகுடை யரிகுல நாயகரூர் சிவகதி யேதரு தொழுபவர் தீவினை சேரவி லக்கிவிடுந் திவதொனி யேமொழி பவரிட மாநில திருமயி லாபுரியே. 8 புயலொரு பூமிசை வருமென வானவர் புதுமலர் தூயவர்மேல் அயலிரு சாமரை குலாவ வுலாவு மரிகுல நாயகரூர் இயலிசை தேர்பவ ரிருநிதி யீபவர் இருடிகள் யாவருநற் செயலவி ரோதிகள் திருவுடை யாரறி திருமயி லாபுரியே. 9 முற்றும். அடிக்குறிப்புகள் 1, பதிகத்தில் பத்துப்பாட்டுக்கள் இருக்க வேண்டும். ஆனால் ஏட்டுப் பிரதியில் 10-வது பாட்டு, காணப்படவில்லை. |