பக்கம் எண் :

28மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 19

திருமயிலாப்பூர் பதிகம் - 2

உலர்தழைப்ப வொளிதிகழ்மூ
      வாமதிமுக்குடையானை யடலாராழி
வலர் தழைக்கும் வண்மயிலை
      மன்னவனை மணியைமுன்னா
ளலர்தவத்தின் பொருள்நாடி
      வேசத்துபாசத்தே யழுந்தி யந்தோ
நிலர்தொகுத்துக் குண்டிகையை
      நிறைப்பான்போ லமர்ந்திருந்த நீசனேனே.      1

எல்லிருக்கு மணிமுடிசாய்த் திந்திரரு
      நரேந்திரரு மெல்லை யில்லாச்
சொல்லிருக்குந் துறவோருந் தொழுமயிலாப்
      புரிநின்ற துணையை முன்னாள்
மல்லிருக்கு மலர்கொண்டு வணங்காதே
      மாதரார் வலைப்பட்டந்தோ
யில்லிருக்க நல்லறஞ்செய்யா திறுமாந்
      திட்டிருந்த வேழையேனே.      2

முதிர்முகிலிற் புலியரவ முரசியம்ப
      முனிகணமு முறையினேற்ற
வதிர்முழவக் கடல்நடு வண்டந்தரமே
      வந்துதிரு மயிலைநின்ற
சதுமுகனைத் தாழாதே தத்துவத்தின்
      றன் மையினைத் தவிர்ந்து நாளும்
கதிர்புறம்பாய்ப் பேர்த்ததுகண் கருத்தரியா
      தொழிந்ததகலுந் தீயனேனே.      3