பக்கம் எண் :

நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள்29

தாட்டவிழ் தாமரை நடந்ததத்துவனை
      முத்திமுதற் பொருளையென்றும்
வாட்டமிலா வளமயிலை வரதன்பால்
      வந்தணுகி யன்னாளின்னாள்
யீட்டமுடன் மலர்கொண்டாங் கிறைஞ்சாதே
      மறஞ்சாய்ந்த வகையே பேணிக்
காட்டநிலா வெரித்தாதோ கண்படாப்போந்
      திருந்தவா கள்வனேனே.      4

பூச்சரிக்கும் பொன்னடியெம் புங்கவனை
      புனையகலம் பொருந்து நூல்கள்
நாச்செரிக்கும் வகைதெரிந்த நாண்முதலாய்
      நன்மயிலை நண்ணிநானிப்
பாச்சரிக்கும் வகையறிந்து பாடாதே
      பாவையர்தம் பயனேபார்த்து
பேய்ச்சுரைக்கு நீரிறைத்துப் பெரிதாய
      பிழைசெய்தேன் பித்தனேனே.      5

பூத்தேரும் பொன்னடியெம் புங்கவனைப்
      பொன்னெயில்மூன் றுடையகோனை
மாத்தேருந் தளிர்மருகில் மன்னுனூ
      மயிலா புரியில் நின்றமாலை
நாத்தேரு முறையதனால் நவிலாதே
      நடலைவாழ் வ தனைநத்திப்
பேய்த்தேரை நீரென்று பின்னோக்கித்
      திரிந்தவா பித்தனேனே.      6

பொழிலிறைப்பூஞ் சினைப்பிண்டிப் பொன்னெயிலு
      ளிருந்தானை வினைகளெல்லாம்
வழிப்படுத்தி வென்றானை வளமயிலை
      யச்சுதனை வுன்னாமுன்னாள்
பழிப்படுக்கும் பாவங்கள் பலசெய்து
      பலகதிக்கோர் பயனுமின்றி
வழிகிடக்க வூர்தோறும் நுழைந்துமயக்
      குற்றுதவா மதியிலேனே.      7