பக்கம் எண் :

30மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 19

அடல்வலையும் வெந்திறலா லனங்கனெனு
      மலராசை யகத்திப்பூக
மடல்வலையப் பொழில்மயிலை மரகதமா
      மலைதன்னை யன்னாளின்னாள்
உடல்வலைய முறப்பணித்தங் கொண்பொருளை
      யோராதே பிறவியென்னுங்
கடல்வலையங் கைநீந்திக் கரைகாணக்
      கருதினேன் கபடனேனே.      8

பொற்றலைவிற் பொலிகவர மலர்ப்பொடியை
      யிளந்தென்றல் புகுந்துவீச
மற்றலரு மணியணை மேல் மதிவட்டக்
      குடைநிழற்கீழ் மயிலைமன்னி
சொற்றலையிற் றுன்பறுக்குந் துறவோனை
      யறவோனைத் தொடராமுன்னாள்
புற்றலையிற் றவிடுகுத்திப் புந்தியேன்
      சிந்தியவா பொறியற்றேனே.      9

அமைச்சிந்தித் தருநகரத் தாழ்ந்தழுந்தி
      வீழாம லடைந்தோர்க் கெல்லாம்
சமைந்திந்த வகத்திருந்த மடமயிலை
      அச்சுதனைச்சாரா முன்னா
ளெமைதிண்ண முடையவர்மற் றிவரவ
      ரென்றவரொ டெழுந்துகத்தி
உமிதின்னும் பெருபயனா லுனைநினையா
      துலகலைந்தே னேழையேனே.      10

முற்றும்