பக்கம் எண் :

நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள்31

திருமயிலாப்பூர் ஸ்ரீநேமிநாதஸ்வாமி பதிகம்-3

தருமனீ தயவடிவுநீ சகலாகமஞ்சொலுஞ் சதுரனீ
யொருவனீ பலவறிவுநீ யுலகங்கள் மூன்றையுமுடையனீ
திருவுநீ ஜினநாதனீ திசையாடை மேவியச்செல்வனீ
நிருபனீ திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே.      1

காலன்வந்துடல் மங்கும்போது கலக்கம் வந்தணுகாமலுன்
சீலமந்திரமைந்து மென்னிடச்சிந்தை தன்னிலிருத்துவாய்
மேலவானவர் போற்றிடும்பத்துவிற்பிரமாண சரீரனே
நீலனே திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே.      2

பாசதொந்தமழுந்தியே வலைபட்டமானதுபோலவே
பேசொணாதவிடும்பைகொண்டு பிறந்தநானுடல்வாடவோ
வாசமேவு மசோகநீழலின்வர தனே யடியார்கள்மேல்
நேசனே திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே.      3

அலையும்வாரிதிபோல நெஞ்சனுதினமு மாசையழுந்தியே
யுலையின்மேன் மெழுகாகுமெந்தனை யுறுதி முத்தியில்வைப்பையே
சொலையிலாநெறி வேந்தனே யொளிகுலவு முக்குடையாளனே
நிலையனே திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே.      4

பொறியினால் வருபாவம்வந்து புகாமலானது புக்கினுஞ்
செறியும் வேதனைநரகில்வீழ்ந்து திகைத்திடாமல் விலக்குவாய்
வெறியுலாவிய வனசமாமலர்மேல் நடந்தருள்வீரனே
நெறியனே திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே.      5

உனைவணங்கினர்பிறவி யொன்றிலுயரு முத்தியிலேறுவ
ரௌவறிந்து முனிருபதங்களை யேற்றிலேன் மலர்சாற்றிலேன்
வினைகடிந்தருடீரனே முழு மெய்யனே நெறியையனே
நினைவனே திருமயிலைமேவிய நேமிநாத ஸ்வாமியே.      6

மதியிலா முழுமூடர் தம்முடன் மருவியுன்னை மறந்துயான்
புதிய தாமரரையிலையி னீரதுபோலுழன்றிடவோ சொலாய்