| 32 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 19 |
கதிகணான்கையும் வென் றிடும்புகழ் கைவலத்திருமார்பனே நீதியனே திருமயிலைமேவிய நேமிநா தஸ்வாமியே. 7 எட்டுவல்வினைவென்ற பின்னையோரெட்டு நற்குணமேவினை தொட்டநாற்கதி விட்டனைமிகு சுகமடைந்தனை தூய்மையாற் சிட்டர்போற்றிய தேவனே தன்மதேசிகா சிவலோகனே நிட்டனே திருமயிலைமேவிய நேமிநா தஸ்வாமியே. 8 தீதிலா தபிறப்பில்வந்து ஜனித்துமுன்னிட திருவறஞ் சாதியாம லவத்தில் நாள்பலதள்ளிடாமலெனையாளுவாய் ஆதிதேவர நாதிதேவரென்றாரு மேத்தருகந்தனே நீதிசேர் திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே. 9 அமையுமிப்பிறவிக்கடற்குள முந்தியான்றிரியாமலுன் கமலநற்பதமடைய வென்னிடர்கவலை தன்னையகற்றுவா யிமையவர்க்கிறைதந் தளித்திடுமெந்தையே யருகந்தனே நிமலனே திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே. 10 நாடியேயுனை நம்பினேனெனை நழுவவிட்டுவிடாமலுன் ஆடகமலர்பொற்பதந் தனையடையவே கிருபையருளுவாய் தோடுமொன்பது மொன்பதுந் தொடராவநந்தசு கேசனே நீடுவாழ் திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே. 11 எத்தனை ஜனனம்மெடுத்தன மின்னமெத்தனைஜன்மமோ அத்தைநானறியேனின் நற்பதமடையவே கிருபையருளுவாய் முத்துரத்தினமிழைத்துவைத்த விசித்திரமுக்குடையாளனே நித்தனே திருமயிலைமேவிய நேமிநா தஸ்வாமியே. 12 தருமனே யெமைகாலபாசமறுத்துந் தயவிலாமலே பொருதும் வெல்வினையெட்டலைத் திடுபுங்கவாதீதில் வேதனே பருதிமாமதி யொளிகள் சேருனை நாடியெத்தனைபல்புகழ் நிருபமா திருமயிலைமேவிய நேமிநா தஸ்வாமியே. 13 முற்றும் |