| நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள் | 33 |
இல்லறத்தார்க்குரிய தசதர்மம் குரு வணக்கம் முறைபொறியில் மறைநீங்கி மூவுலகிற் பொருள்களெலாங் குறைவின்றி யொருங் குணர்ந்த குணதரன்சே வடிவணங்கி நிறையுடைய மாதவரு மேனோரு நின்றுவப்ப வறைகுவன் தசதன்ம மறநெறிய தியல்பினால், 1 குளிர்நாவற் பரதத்துக் குருநாட்டுச் சுசிமைகோன் களியானை யரிவண்ணன் காதலிள மகளிரொடு மருளாழி யான் கணத்துக் கிறைவன்றன் னடிவணங்கி விளியாத மனை யறத்தை விரிக்கு மென் றுரைத்தனனே. 2 இல்லறத்தார்க்கு அணுவிரதம் ஆற்றிய நல்விரதத் தரசனுந் தேவியரு மேற்றுமின் னடிகளெனக் குரியனதா மென்றிறைஞ்சிக் கூற்றுவனைக் குதித்துயர்ந்த கோட்டமில் சீர் மாதவரு மேற்றினா ரணுவிரத மில்லறத்தாற் குரியனவே. 3 இல்லறத்தார்க்குரிய பத்து கடமைகள் கொல்லாமை பொய்யாமை கள்ளாமை காமத்தை யொல்லாமை யொண்பொருளை வரைதலோ டிவைபிறவும் பொல்லாத புலசுதேன்கள் ளிருளுண்ணா நிலைமையொடு நல்லாரைப் பணிவதுவும் நாமுறையே பயனுரைப்பாம். 4 1. கொல்லா விரதத்தின் பயன் பல்லார்தற் பணிவதுவும் பகைகெடத்தாம் பெருகுதலு மில்லார்க்கொன் றீவதுவும் யினியெனவே நுகர்வதுவும் நல்லார்கண்டு வப்பதுவும் நலிவிலா தின்புறலும் கொல்லாத நல்வி ரதங் காத்ததன் பயனாகும். 5 |