பக்கம் எண் :

38மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 19

 மகேந்திர விக்கிரமவர்மன் இயற்றிய
 மத்த விலாசம்
 (நாந்தி பாடியவுடன் சூத்திரதாரர் அரங்கத்திற்கு வருகிறார்.)
சூத்திரதாரர்:பேச்சு, ஆடல், உடை, உருவம், குணம், மெய்ப்பாடு இவைகளைத் தன்னிடத்தே கொண்டுள்ள, திப்பிய னாகிய காபாலியின் தாண்டவம், மூவுலகத்திலும் போற்றப்படுகின்றது. இத்தாண்டவத்தைக் காண்ப வனும் அக்காபாலியே. அவனுடைய அளவுகடந்த அகண்ட அருளானது இந்த உலகமாகிய பாத்திரத் தில்1பரந்து நிறைவதாக.
 புதிய நாடகத்தை நடிக்கும்படிச் சபையோர் எங்களை நியமித்திருக்கிறார்கள். இளையாள் மீது கோபங் கொண்டிருக்கிற என்னுடைய மூத்த மனைவியின் கோபத்தை தணிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அவளிடம் போகிறேன். (அணியறையை நோக்கி) ஆரியே! இங்கு வருக. (கடிகை வருகிறாள்.)
நடிகை:(சினத்துடன்) ஐயா! பௌவன குணபர மத்த விலாசப் பிரஹசனத்தை2 என்னிடம் விளையாட வந்து விட்டீரோ?
சூத்திர:ஆமாம். அதுதான்.
நடிகை:அப்படியானால், அதை தாங்கள் யாரிடம் ஆசை கொண்டு இருக்கிறீர்களோ அவளிடம், போய் விளையாடுங்கள்.
சூத்திர:உன்னோடு ஆடும்படித்தான் எனக்குக்கட்டளை.
நடிகை:அப்படி அவள் உமக்குக் கட்டளையிட்டாளோ?
சூத்திர:ஆமாம். இந்த ஆட்டத்தில் நீ நடித்தால் சபையோரின்