பக்கம் எண் :

நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள்39

 நன்மதிப்பைப் பெறுவாய்.
நடிகை:நன்மதிப்பைப் பெறத் தகுந்தவர் தாங்கள் தான்.
சூத்திர:அது எனக்குத் தகுந்தது தான். எப்படி என்றால் சபையோர் உன்னுடைய நடிப்பைக் கண்டு மகிழ்ந்து அந்த நன்மதிப்பை எனக்கு அளிப்பார்கள்.
நடிகை:(மகிழ்ச்சியுடன்) அப்படியானால், சபையோரின் அபிமானத்தைப் பெற்றிருக்கிறேன்!
சூத்திர:ஆம். மெய்யாகவே.
நடிகை:இந்த நல்ல செய்தியைச் சொன்ன தங்களுக்கு என்ன வெகுமதி தருவேன்!
சூத்திர:வெகுமதியைப் பற்றிப் பேசி வீணாகக் காலங்கழிக்க வேண்டாம். இதோ உன்னுடைய இனிய முகத்தைக் காண்கிறேன். மகிழ்ச்சியைக் காட்டுகிற
உன்னுடைய கண்களையும், புன்முறுவல் அரும்பும் உன்னுடைய வாயிதழ்களையும் காண்கிறேன். இதைவிட வேறு வெகுமதி எனக்கு என்ன வேண்டும்?
நடிகை:இப்போது என்ன ஆட்டம் ஆடப் போகிறீர், ஐயா!
சூத்திர:ஏன். நீதான் முன்னமே சொன்னாயே; மத்த விலாசப் பிரஹசனம் என்று.
நடிகை:நான் கோபமாகப் பேசியது உண்மையாய் விட்டது! இந் நாடகத்தை இயற்றிய ஆசிரியர் யாரோ?
சூத்திர:சொல்லுகிறேன் கேள். பல்லவ குலமாகிய உலகத் திற்கு மேருமலை போன்றவரும், எல்லா நாட்டரசர் களையும் வென்று புகழ் கொண்டவரும், ஆகண்ட லனை (இந்திரன்)ப் போன்ற ஆற்றலையுடையவரும். நமது செல்வப் பெருமைக்கேற்ப கொடைப் பெருமையினால் மகாராஜனையும் (குபேரன்) சிறியவனாகச் செய்தவரும் ஆகிய ஸ்ரீ நரசிம்ம விஷ்ணு வர்மருடைய திருக்குமாரர் ஆவர் இந்நூலாசிரியர். இவ்வாசிரியர் குணங்களைக்