பக்கம் எண் :

நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள்41

இடம்: காஞ்சிமா நகரம்.

காபாலிகன் சத்திய சோமன், தன் மனைவி தேவ சோமையுடன் குடித்து மயங்கி வருகிறான்.)

காபாலி:கண்ணே தேவசோமா! தபசு செய்வதால் நினைத்த உருவத்தை அமைத்துக் கொள்ளலாம் என்பது உண்மை தான். நீ கொண்டுள்ள பரமவிரதத்தின்3 பலனாக உன் உருவத்தையே மாற்றிக் கொண்டு கட்டழகியாய்க் காணப்படுகிறாய்!
 முகத்தில் சிறு வியர்வைத் துளிகள் அரும்ப, புருவங்கள் வில்லைப்போல் வளைந்து நெகிழ, காரணமின்றிச் சிரிப்பதும், வார்த்தைகள் குழறுவதும், கண்கள் சிவந்திருப்பதும், கருவிழிகள் சுழல்வதும், கூந்தல் அவிழ்ந்திருப்பதும், கழுத்திலுள்ள மாலைகள் நெகிழ்வதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றன.
தேவசோமை:நான் குடித்திருக்கிறதாகவா சொல்லுகிறீர்?
காபாலி:அன்பே, என்ன சொன்னாய்?
தேவ:நான் ஒன்றும் சொல்லவில்லையே!
காபாலி:அப்படியானால், நான் குடித்திருக்கிறேனா?
தேவ:ஐயா, தரை சுற்றுகிறது; பூமி சுழல்கிறது. நான் விழுந்து விடுவேன் போல் இருக்கிறது. என்னைப் பிடித்துக் கொள்ளும்.
காபாலி:இதோ பிடித்துக் கொள்கிறேன். அன்பே! (அவளைப் பிடிக்கப்போய் குடி மயக்கத்தினால் கீழே விழுகி றான்)4 சோமதேவீ! என் கண்ணே! என்மேல் உனக்குக் கோபமா? உன்னைப் பிடிக்க வரும்போது ஏன் விலகிப் போகிறாய்.
தேவ:ஆமாம். சோமாதேவிக்கு உன்மேல் கோபந்தான். அவள் முன்பு தலைவணங்கி சாந்தப்படுத்த முயன்றாலும் அவள் உன்னை விட்டு விலகிப் போகிறாள்!