பக்கம் எண் :

நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள்45

தேவ:ஆமாம் ஐயா. நீர் சொல்லுவது முழுவதும் சரியே. உலகத்துக்கு நல்லதையே செய்கிற சிவபெருமான், உலகத்தை ஒரு போதும் அழிக்க மாட்டார்.
 (ஒருவரை யொருவர் கன்னத்தில் தட்டிக் கொள்கிறார்கள்.)
காபாலி:அம்மணீ! பிக்ஷாந்தேஹி!
(உள்ளிருந்து
ஒரு குரல்:இதோ இதை வாங்கிக் கொள், ஐயா.)
காபாலி:இதோ பெற்றுக் கொள்கிறேன். தேவசோமா! என்னுடைய கபால பாத்திரம் எங்கே?
தேவ:அதைக் காணவில்லையே!
காபாலி:(யோசித்து) அந்தக் கள்ளுக்கடையில் அதை மறந்து வைத்துவிட்டோம் போலிருக்கிறது. நல்லது. அங்கே போய்ப் பார்ப்போம்.
தேவ:அன்போடு அளிக்கும் பிச்சையை வாங்கா மலிருப்பது முறையல்லவே. இப்போது என்ன செய்வது?7
காபாலி:‘ஆபத்தர்ம’ப்படி செய். இந்த மாட்டுக் கொம்பில் வாங்கிக் கொள்.
தேவ:அப்படியே செய்கிறேன்.

(பிச்சையை மாட்டுக் கொம்பில் பெற்றுக் கொள்கிறாள். பிறகு, இருவரும் சென்று கபால பாத்திரத்தைச் தேடுகிறார்கள்.)

காபாலி:இங்கேயும் அதைக் காணோமே. எங்கு போய் விட்டது! (ஆத்திரத்துடன்) ஓ! மகேஸ்வரர்களே, மகேஸ்வரர்களே! என்னுடைய கபால பாத்திரத்தைக் கண்டீர்களா? மகேஸ்வரர்கள் என்ன சொல்லு கிறார்கள்? இல்லை. நாங்கள் பார்க்கவில்லை என்றா சொல்லுகிறார்கள்? அந்தோ! நான் கெட்டேன். என்னுடைய தூய்மையான காபாலிக விரதம் அழிந்து விட்டது. கபாலபாத்திரம் இல்லாமல், நான் எப்படி காபாலிகன் ஆவேன்? நான் உண்ணவும் குடிக்கவும்