பக்கம் எண் :

46மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 19

 அந்த தூய கபாலபாத்திரம் எவ்வளவு உதவியாக இருந்தது! அப்பாத்திரம் போய்விட்டபடியால், ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டதுபோல், என்னுடைய மனம் கலங்குகிறது. (தரையில் விழுந்து தலையில் அடித்துக் கொள்கிறான்.) ஆ! தெரிந்தது, தெரிந்தது! கபால பாத்திரம், காபாலிக விரதத்துக்கு ‘லக்ஷணா மாத்திரம்8’ தான். கபால பாத்திரத்தை இழந்து விட்டபடியினாலேயே என் கபாலிக விரதத்தை நான் இழந்து விடவில்லை. (எழுந்திருக்கிறான்.)
தேவ:அந்தக் கபால பாத்திரத்தை யார் எடுத்திருப்பார்கள், ஐயா!
காபாலி:அதில், வறுத்த இறைச்சியை வைத்திருந்தபடியால், அதை ஒரு நாயாவது எடுத்திருக்க வேண்டும்; அல்லது, ஒரு பௌத்த பிக்ஷுவாவது எடுத்திருக்க வேண்டும்.
தேவ:அப்படியானால், இந்த காஞ்சிமா நகரம் முழுவதும் சுற்றிப் பார்த்து அதைக் கண்டு பிடிப்போம். (இருவரும் நடந்து செல்கிறார்கள். ஒரு பௌத்த பிக்ஷு, தன் கையில் ஒரு மண்டையை9 ஏந்தி, அதைத் தனது மேலாடையில் மறைத்துக் கொண்டு வருகிறான்.)
பௌ. பிக்கு:ஆகா! நம்முடைய உபாசக அன்பன் தனதாச செட்டியின் தர்மம், மற்ற எல்லாருடைய தர்மங்களை விட மேம்பட்டது. அவன் எனக்குக் கொடுத்த இந்த உணவு, பலவித மச்சமாமிசக் கறி வகைகளுடன் மணமும் சுவையும் உள்ளது. இப்போது இராசவி காரைக்குப்10 போகவேண்டும். (நடந்து கொண்டே தனக்குள்)
 ஆ! பகவான் ததாகதருடைய (புத்தருடைய) கருணையே கருணை. என்னைப் போன்ற, பௌத்த சங்கத்தைச் சேர்ந்த பிக்குகள் வசிக்க நல்ல விகாரை களையும் படுத்துத் தூங்க நல்ல படுக்கைகளையும் அனுமதித்து இருப்பதோடு, முற்பகலில் வயிறாரச் சாப்பிடவும் பிற்பகலில் சுவையும் மணமும் உள்ள