(அவளிடம்) அம்மணி! அப்படிச் சொல்லாதே. எங்களுக்கு அது தகுந்ததல்ல. (நாக்கைச் சப்பிக் கொள்கிறான்.
தேவ: | போமையா, போம். உமக்கு இவ்வளவு நல்ல, அதிர்ஷ்டம் எப்போ கிடைக்கப்போகிறது. |
காபாலி: | தேவசோமா! அவருக்கு மனத்தில் ஆசை பொங்கி வாய் ஊறுகிறது. ஆகையால், பேச்சு குழறுகிறது. |
பௌ.பிக்கு: | உங்களுக்கு இன்னும் என்மேல் இரக்கம் உண்டாகவில்லையா! |
காபாலி: | எனக்கு இரக்கம் இருந்தால் எப்படி வீதராகனாக14 இருக்க முடியும்? |
பௌ. பிக்கு: | வீதராகராக இருப்பவர் கோபம் இல்லாதவராகவும் இருக்க வேண்டுமே. |
காபாலி: | என்னுடைய பொருளைக் கொடுத்துவிட்டால், கோபம் இல்லாதவனாக இருப்பேன். |
பௌ. பிக்கு: | உன்னுடைய “பொருள்” என்பதன் பொருள் என்ன? |
காபாலி: | கபால பாத்திரந்தான். |
பௌ. பிக்கு: | என்ன! கபாலபாத்திரமா? |
காபாலி: | “கபால பாத்திரமா” என்று கேட்கிறார் இவர்! இது இவருக்கு இயற்கைதானே. கண்ணுக்குப் புலப்படும் உண்மைப்பொருள்களை மண், விண், கடல், மலை முதலியவற்றை எல்லாம் மாயை என்றும் மித்தை15 என்றும் கூறியவரின் வழிவந்த மகன் அல்லவா இவர்? ஆகையால், சிறு மண்டையோட்டையும் “இல்லை” என்று சொல்லி மறைக்கமாட்டாரா? |
தேவ: | இப்படி எல்லாம் நயமாகப்பேசி நல்லவிதமாகக் கேட்டால் கொடுக்கமாட்டார். அவர் கையில் இருக்கிற கபாலபாத்திரத்தைப் பிடுங்கிக்கொண்டு வாருங்கள். |